கன்சர்வேட்டிவ் கட்சியின் இடைக்கால தலைவராக கென்டிஸ் பர்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் பதவிக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் கட்சியின் தலைவராக கடமையாற்றிய Erin O’Too தோல்வியைத் தழுவியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைமைப் பொறுப்பு கென்டிஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கென்டிஸ் மானிடோபா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் தலைமை பதவியை வகித்து வந்த எரின் ஓடுலேவிற்கு தமது மெய்யான நன்றியையும் கௌரவத்தையும் வெளியிடுவதாக கென்டிஸ் தெரிவித்துள்ளார்.
எரின் கட்சியின் மிகச் சிறந்த சொத்து எனவும் அவரது உதவியை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.