கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் ட்ரக் வண்டி பேரணி போராட்டம் சட்டவிரோதமானது எனவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் ஒட்டாவா பொலிஸாருடன் இணைந்து செய்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆறாவது நாளாக ட்ரக் வண்டி பேரணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் கட்டுப்பாடுகளை ரத்து செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் தரப்பினர் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.