Home கனடா அல்பர்ட்டாவில் விரைவில் கோவிட் சான்றிதழ் நடைமுறை ரத்து

அல்பர்ட்டாவில் விரைவில் கோவிட் சான்றிதழ் நடைமுறை ரத்து

by Jey

அல்பர்ட்டாவில் தடுப்பூசி சான்றிதழ் முறைமை விரைவில் ரத்தாகும் என முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான திகதி நிர்ணயிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல்பர்ட்டாவில் அதிக தடுப்பூசி ஏற்றுகை வீதம் மிகவும் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வைத்தியசாலைகள் மீதான அழுத்தங்களும் வெகுவாக குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் வெகு விரைவில் தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அவர் உறுதி வழங்கியுள்ளார்.

எதிர்வரும்மார்ச் மாத இறுதியளவில் அல்பர்ட்டா மாகாணத்தில் கோவிட் சான்றிதழ் நடைமுறை முழுமையாக ரத்து செய்யக்கூடிய சாத்தியங்கள் உண்டு என முதல்வர் கென்னி தெரிவித்துள்ளார்.

related posts