கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
வரலாறு காணாத அளவிற்கு எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளது.
மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
இதனால் எரிவாயுவின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எரிபொருள் ஒரு லீற்றரின் விலை சராசரியாக 151.6 சதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டின் பின்னர் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.