ஒன்றாரியோ மாகாணத்தில் 30 மில்லியன் டொலர் வெற்றிப் பரிசினைக் கொண்ட லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு 30 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக யார் இந்த டிக்கட்டை விற்பனை செய்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இரண்டாவது தடவையாக அடுத்தடுத்து ஒன்றாரியோவில் ஜாக்பொட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 22 மில்லியன் டொலர் பெறுமதியான லொத்தர் சீட்டும் வென்றெடுக்கப்பட்டுள்ளது.
30 மில்லியன் டொலர் பரிசு வென்ற வெற்றியாளர் இதுவரையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.