Home இந்தியா சகல கொரோனா வகைகளுக்கும் ஒரே தடுப்பூசி அறிமுகம்

சகல கொரோனா வகைகளுக்கும் ஒரே தடுப்பூசி அறிமுகம்

by Jey

இந்திய விஞ்ஞானிகள் கொரோனா வைரசின் அனைத்து வகை உருமாற்றங்களையும் எதிர்த்து செயல்பட கூடிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புவனேஷ்வரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

வருங்காலங்களில் எவ்வித மாற்றங்களை அடைந்து கொரோனா வைரஸ் வந்தாலும் அதனை எதிர்த்து இந்த புதிய தடுப்பூசி திறம்பட செயலாற்றும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் முறையினை கையாண்டு அபிஸ்கோவேக் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் உட்பட தீங்கு தரக்கூடிய 6 வகையான வைரஸ் குடும்பங்களை சேர்ந்த வைரசுகளை எதிர்த்து செயலாற்றும்.

இந்த புதிய தடுப்பூசி நிலைத்தன்மை கொண்டது, நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது என ஆராய்ச்சியாளர்கள் அபிக்யான் சவுத்ரி, சுப்ரபாத் முகர்ஜி, பார்த்தசாரதி சென் குப்தா, சரோஜ் குமார் பாண்டா மற்றும் மலாய் குமார் ராணா ஆகியோர் கூறினர்.

ஒருங்கிணைந்த முறையை பயன்படுத்தி தடுப்பூசி உருவாகியுள்ளது. அடுத்த கட்டமாக இதன் தயாரிப்பு மற்றும் பரிசோதனை தொடங்கும்.

இந்த மாதிரியான தடுப்பூசியை உலகில் இதுவரை எவரும் உருவாக்கவில்லை. கொரோனா ரக வைரசுகள் அனைத்துக்கும் எதிராக செயல்படும் ஒரே தடுப்பூசி இது தான்.

வைரசுகளின் ஸ்பைக் புரோட்டீனில் இருக்கும் பாதுகாப்பான பகுதியை முதலில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வைரசின் அந்த பகுதி சில மாறுபாடுகளை மட்டுமே அடைகிறது.

இந்த புரோட்டீன்கள் மனித உடலில் வைரசுகளின் தாக்குதலை எதிர்த்து செயலாற்றும் நோய் எதிர்ப்பு திறனை அதிக அளவில் தருகின்றன. இதன்மூலம் வைரசுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை அளிக்க முடியும்.

இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நோயாளிகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

related posts