பிரத்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்திற்காக கனேடிய தபால் திணைக்களம் தபால் முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது.
ராணியாக மகுடம் சூடி 70 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இவ்வாறு தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் அரச தலைவராக, அரச வருகைகள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அவரது முந்தைய வெள்ளி, பொன் மற்றும் வைர விழாக்களுக்காக வெளியிடப்பட்ட 70 க்கும் மேற்பட்ட கனேடிய முத்திரைகளில் ராணி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய முத்திரையானது அர்னால்ட் மச்சினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முத்திரைகளை இன்று முதல் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்ம்.
கவர்னர் ஜெனரல் மேரி சைமனும் ராணிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.