உணவு எனும் அமுதம்! சிறந்த அன்னம்; சிறப்பான ஆரோக்கியம் ”வயித்து வலி தாங்க முடியல டாக்டர்…’முனகலுடன், மருத்துவமனைக்கு செல்லும் போது, டாக்டர் கேட்கும் முதல் கேள்வி,’நேத்து நைட் என்ன சாப்பிட்டீங்க? வெளியில் எதுவும் சாப்பிட்டீங்களா?’ என்பதுதான்.
உடல் உபாதைக்கு முக்கிய காரணம், பாதுகாப்பு இல்லாத உணவு தான் என்பது மருத்துவம் கூறும் உண்மை.இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான், ஆண்டு தோறும் ஜூன் 7ம் தேதியை, ‘உலக உணவு பாதுகாப்பு தினம்’ என, ஐ.நா., சபை அறிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற உணவால், 200 வகை நோய் ஏற்படும்: 10 பேரில் ஒருவர், அவ்வாறு பாதிக்கின்றனர்.
அந்த வகையில், ஆண்டுக்கு, 4.2 லட்சம் பேர் மரணிக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். தற்போது, உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று, உணவு பாதுகாப்பு சார்ந்த விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வைத்திருக்கிறது. இக்கால கட்டத்தில், ஓட்டல் உள்ளிட்ட வெளியிடங்களில், உணவருந்துவது வெகுவாக குறைந்திருக்கிறது.
சமையலறைக்குள் நுழையும் முன சுத்தமாக கைகளை கழுவுதல், சமைத்த, சமைக்காத உணவை பிரித்து வைத்தல், சத்துள்ள உணவை உண்ணுதல், உணவுப்பொருட்களை சரியான வெப்ப நிலையில் வைத்தல் உள்ளிட்ட ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும். இவையெல்லாம் பெரும்பாலும் கடை பிடிக்கப்பட்டாலும் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதன் மூலம், சுகாதாரம் பாதிக்கப்படும்’
இன்றைய பாதுகாப்பான உணவு; நாளைய ஆரோக்கியமான வாழ்வு’ என்ற ஒற்றை வரியை, ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வின் மையக் கருத்தாக ஐ.நா., சபை முன் வைத்துள்ளது.இன்று, உலக உணவு பாதுகாப்பு தினம்
இன்று, உலக உணவு பாதுகாப்பு தினம்
இன்று, உலக உணவு பாதுகாப்பு தினம்