ஒட்டாவ நகரில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் ட்ரக் வண்டி பேரணி போராட்டம் காரணமாக இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.
நகரின் மேயர் Jim Watson அவசரகால நிலைமை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு அவசரகால நிலைமை அறிவிக்கப்படுவதாக மேயர் ஜிம வெட்சன் தெரிவித்துள்ளார்.
கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போராட்டங்களினால் ஒட்டாவா மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.