பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் நவிமும்பையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சீனா- தென்கொரியா அணிகள் மல்லுகட்டின.
விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் தென்கொரியா 2 கோல்கள் அடிக்க, பிற்பாதியில் எழுச்சி பெற்ற சீனா 68 மற்றும் 72-வது நிமிடங்களில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து வெற்றிக்குரிய கோலை அடிக்க இரு அணியினரும் வரிந்து கட்டி நின்றனர். கடைசி நிமிடத்தில் சீனாவின் ஸியாவ் யுஸ் கோல் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.
சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவின் கனவை தகர்த்து 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சீனா கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்த கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் பல வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.