Home இந்தியா வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வினியோகித்து வரும் ‘வாக்குறுதி ஒப்பந்தம்

வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வினியோகித்து வரும் ‘வாக்குறுதி ஒப்பந்தம்

by Jey

திருப்பூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்தை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள், மக்களின் கேள்விக்கணைகளைச் சந்திக்க சிரமப்பட வேண்டியிருக்கும்; வேட்பாளர்கள், வாக்குறுதிகளை அள்ளிவிட முடியாது.

திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சியில் 630 பேர் உட்பட 2,493 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று, மனுக்கள் வாபஸ் முடிந்ததும் இறுதிப்பட்டியல் வெளியாகிறது. பல இடங்களில், வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கியிருக்கின்றனர்.

பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களைப் போல் அல்லாது, உள் ளாட்சி தேர்தலில், தெருத் தெருவாக இறங்கி, வீடு வீடாக சென்று, நேரில் ஆதரவு திரட்ட வேண்டிய கட்டாயம், வேட்பாளருக்கு உண்டு. இதற்கேற்ப, தி.மு.க., – அ.தி.மு.க., உட்பட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், வியூகங்களை வகுக்க துவங்கியுள்ளனர்.குடிநீர், சாலை, சாக்கடை, தெருவிளக்கு உட்பட பல்வேறு அடிப்படை வசதிப் பிரச்னைகளில் துவங்கி, தங்கள் சொந்தப்பிரச்னைகள் வரை, வேட்பாளர்களிடம், எடுத்துக்கூற, வாக்காளர்களும் தயாராக உள்ளனர்.

வாக்காளர்களை வேட்பாளர்கள் நேருக்கு நேர் எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் தற்போதே, தங்கள் பிரச்னைகள் குறித்து, பேனர்களை வைக்க பொதுமக்கள் துவங்கியிருக்கின்றனர். உதாரணமாக, நேற்று

செல்லாண்டியம்மன் துறை குடியிருப்பாளர்கள், மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களாகட்டும்; அ.தி.மு.க., வேட்பாளர்களாகட்டும்; வார்டு பிரச்னைகளை நன்கறிந்து, வாக்காளர்களிடம் நுணுக்கமாகவும், அவர்களை திருப்திப்படுத்தும் வகையிலும், பதில் சொல்லாவிட்டால், வேட்பாளர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான் யதார்த்தம்.

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், ‘சீட்’ கிடைக்காத கட்சி பிரமுகர்கள், வெளிப்படையாக, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பவர்களாக காட்டிக்கொண்டாலும், வாக்காளர்களை, வேட்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்கான யுத்தியையும், இவர்களே வகுத்துக்கொடுப்பர் என்பதுதான், பல வார்டுகளில் நிலவும் நிஜம்.

மழைக்காலத்தில், திருப்பூர் வெள்ளக்காடாக மாறியது. அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகளே இதற்கு காரணம். மழைக்காலத்தில், உதவிக்கரம் நீட்டிய கட்சியினர், மழை முடிந்ததும், இக்குறைபாடுகளை நீக்குவதற்கு, மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு தீர்வை ஏற்படுத்தினரா என்பது கேள்விக்குறியே.
பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் நகராட்சிகள், அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சிகளிலும், தீர்வு காணப்படாத குறைபாடுகள் ஏராளமாக இருக்கின்றன.

பா.ஜ., – நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், ‘வாக்குறுதி ஒப்பந்தம்’ போன்று தயாரித்து வாக்காளர்களிடம் வினியோகித்து வருகின்றனர். இதனால், எந்த வேட்பாளரும் இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளிவிட முடியாது.நேருக்கு நேர் சந்திக்கும் போது, வாக்காளர்களின் ஆவேசம் உட்பட அவர்களது மனநிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தெளிவான பதிலை தராவிட்டால், வேட்பாளர்களுக்கு சிக்கல்தான்.

ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிவேட்பாளர்களாகட்டும்; அ.தி.மு.க.,வேட்பாளர்களாகட்டும்; வார்டு பிரச்னைகளை நன்கறிந்து, வாக்காளர்களிடம்நுணுக்கமாகவும், அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும், பதில் சொல்லாவிட்டால், வேட்பாளர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான் யதார்த்தம்.

related posts