Home சினிமா ஆஸ்காரின் யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

ஆஸ்காரின் யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

by Jey

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’ (Jai bhim), கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா (Actor Suriya) இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ (Jai Bhim) திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. அதேபோல் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது.

இதற்கிடையில் சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் (Oscar Award) அதிகாரபூர்வ யூ-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. அதன்படி ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றது. நாளை இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது ஆஸ்கர் கமிட்டி சார்பில் பிப்ரவரி 8 ஆம் தேதியில் ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவரான ஜாக்குலின் கோலே தொகுத்து வழங்கினார்.

இத்தகைய சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்வீட்டில் ‘நாளை காலை எந்த ஆஸ்கர் பரிந்துரை உங்களிடம் மிகப்பெரிய ரியாக்சனை ஏற்படுத்தும்’ என்று கேட்டிருந்தார். அவரது இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஜாக்குலின் ‘சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ‘ஜெய் பீம்’ – என்னை நம்புங்கள்” என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குள் ‘ஜெய் பீம்’ படம் நுழைந்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

related posts