Home இந்தியா காங்கிரஸ் பிரதிநிதியை நியமித்து ஸ்டாலினுக்கு, சோனியா கடிதம்

காங்கிரஸ் பிரதிநிதியை நியமித்து ஸ்டாலினுக்கு, சோனியா கடிதம்

by Jey

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கான, காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

தி.மு.க., தலைமை அறிக்கை:லோக்சபா தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு, காங்., தலைவர் சோனியாவை சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார்.

உடனே, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு, சோனியா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா எழுதிய கடிதத்தில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க நானும், நான் சார்ந்த கட்சியும் ஜனநாயக மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைகிறோம்.

இதுகுறித்து நேரில் ஆலோசிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி எழுதிய கடிதத்தில், ‘சமூகநீதி கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவிக்கிறேன். ‘இந்த அமைப்பை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து, நாம் கலந்தாலோசிக்க வேண்டும்’ என தெரிவித்து உள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த முன்னெடுப்பைப் பாராட்டுகிறேன்; மக்கள் ஜனநாயக கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என தெரிவித்து உள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

related posts