Home இந்தியா மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் சூழல்

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் சூழல்

by Jey

மக்கள் நல பணியாளர்களுக்கு, மீண்டும் வேலை வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறி உள்ளது.தமிழகத்தில், தி.மு.க., அரசு, 1990ல் மக்கள் நல பணியாளர்களை நியமனம் செய்தது.

இதன்படி பணி வாய்ப்பு பெற்ற 13 ஆயிரத்து 500 பேரையும், அடுத்து வந்த அ.தி.மு.க., அரசு நீக்கியது. இது தொடர்ந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க, 2011ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.இதற்கிடையே, தங்களுக்கும் கொரோனா நிதி உதவி வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி, மக்கள் நல பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள், தொடர்பாக தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்.இவ்வாறு கோரப்பட்டது.

இதை ஏற்று, விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தை அடுத்து, மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிகிறது.

related posts