உக்ரேய்னில் வாழ்ந்து வரும் கனேடியர்களை முடிந்தளவு விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கனேடிய அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
உக்ரேய்னை விட்டு வெளியேறக்கூடிய சாத்தியங்கள் காணப்படும் போதே கனேடிய பிரஜைகள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய இராணுவப் படையினர் படையெடுக்கும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரேய்ன் வாழ் கனேடியர்களுக்கு வெளிவிவகார அமைச்சு மின்னஞ்சல் வழியாகவும் இது குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வர்த்தக ரீதியான விமானங்கள் பயணம் செய்யும் போதே உக்ரேய்னிலிருந்து கனேடியர்கள் வெளியேற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கனேடிய பிரஜைகள் காத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.