Home இந்தியா அதிகமாகி உள்ள  சிறை நெரிசல் விகிதம்

அதிகமாகி உள்ள  சிறை நெரிசல் விகிதம்

by Jey

நாட்டில் காவல்துறை, நீதித்துறை, சிறைகள், சட்ட உதவிகள் தொடா்பாக பல்வேறு அரசு அமைப்புகளிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் தன்னாா்வ அமைப்புகள், இந்திய நீதி ஆய்வறிக்கை 2020ல் வெளியிட்ட தகவலில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பா் முதல் பெரும்பாலான மாநிலங்களில் சிறை நிா்வாகம் முன்னேற்றம் கண்டுள்ளது.

மொத்தம் 14 அளவீடுகளில் 12ல் தமிழகம் மற்றும் கா்நாடகா பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. உத்தர பிரதேசத்தின் நிலை மோசமாகவுள்ளது. தேசிய அளவில் கைதிகள் நீதிமன்றங்களை அணுகுவதற்கான வழிமுறைகளும் வாய்ப்புகளும் 65 சதவீதமும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது 24 சதவீதமும் குறைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2020ம் ஆண்டு டிசம்பா் மாதம் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை 4,88,511 ஆக அதிகரித்தது. இது 2019ம் ஆண்டைவிட 1.5 சதவீதம் அதிகம். 2020ம் ஆண்டு சிறைகளில் அதிக கைதிகளால் ஏற்பட்ட நெரிசல் விகிதம் 18 சதவீதம். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 2 சதவீதம் அதிகம்.

இந்த புள்ளிவிவரம் நாட்டில் உள்ள 1,306 சிறைகளின் தேசிய சராசரி விகிதமாகும். இந்த விகிதத்தினை விட 9 மாநிலங்களின் சிறை நெரிசல் விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நெரிசலுக்கு பிரதான காரணம் விசாரணை கைதிகளின் எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

related posts