அல்பர்ட்டா மாகாணத்தில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் ஜேசன் கென்னி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதியுடன் அனைத்து விதமான கோவிட் சுகாதார கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் பலர் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்பதில் கூடுதலான நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண ரீதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் தேவையான பகுதிகளில் மாநகரசபை ரீதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நகர நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.