Home உலகம் தொழில்நுட்ப செயல் குழு தலைமை ஆலோசகராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

தொழில்நுட்ப செயல் குழு தலைமை ஆலோசகராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

by Jey

அமெரிக்க எம்.பி.,யின் ‘கிரிப்டோ’ தொழில்நுட்ப செயல் குழுவின் தலைமை பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோசகராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.,யான பீட் செசன்ஸ், தன் கிரிப்டோ தொழில்லுட்ப செயல் குழுவின் தலைமை பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோகராக அமெரிக்க வாழ் இந்தியரான ஹிமான்சு படேலை நியமித்து உள்ளார்.

இதுகுறித்து பீட் செசன்ஸ் கூறியதாவது:நிதி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டில் அடுத்தகட்ட நிலையை எட்ட அமெரிக்காவும் இந்தியாவும் உலகளவில் முன்னணியில் இருக்க வேண்டியது அவசியம்.இதற்காக ஹிமான்சு படேலுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரது ஆலோசனை என் குழுவிற்கு மிகவும் அவசியம். திறமையான நிபுணர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை நான் விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி ஹிமான்சு படேல் கூறுகையில், “கிரிப்டோ தொழில்நுட்ப செயல் குழுவில் என்னை நியமித்திருப்பது ‘டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சி’ பற்றிய கூட்டு விவாதங்களுக்கு வழிவகுக்கும். மேலும் உலக அளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும்,” என்றார்.

ஹிமான்சு படேல், அமெரிக்காவில் உள்ள ‘ட்ரைடன் எலக்ட்ரிக் வெஹிகில்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இந்நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் டிரக் மற்றும் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

related posts