டோன்ட் லுக் அப்’ படம் வெளியான இரண்டே வாரங்களில் நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஆடம் மெக்கே இயக்கத்தில் லியர்னாடோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள படம் ‘டோன்ட் லுக் அப்’. இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு விண்கல்லை பற்றி தெரிந்துகொள்ளும் இரண்டு விஞ்ஞானிகளை சுற்றி நடக்கும் கதையில் காலநிலை மாற்றம், சமகால அமெரிக்க அரசியல் ஆகியவற்றை நக்கலுடன் ரசிக்கத் தக்க வகையில் படமாக்கியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.
‘டோன்ட் லுக் அப்’ படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 263 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில்
விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார். உலகம் நகையாடுகிறது கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது என பதிவிட்டுள்ளார் என பதிவிட்டுள்ளார்.