பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் முதன்முறையாக டிக்-டாக்கில் பதிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டது. எனினும், ஆபாச பதிவுகளை வெளியிடும் கணக்குகள் முடக்கப்படும் என அந்நிறுவனம் அளித்த உறுதியை தொடர்ந்து, 10 நாட்களுக்கு பின் இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போலீசார் டிக்-டாக் பதிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டின் உள்ளூர் ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
இதன்படி, பஞ்சாப் போலீசார் அனைவரும் பணி நேரத்தில் டிக்-டாக் பதிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஏனெனில், டிக்-டாக்கில் பதிவேற்றி, வைரலாவது, துறைக்கு எதிர்மறை தோற்றம் ஏற்படுத்தும் என்றும் கடிதம் வழியே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி, சமூக ஊடகத்தில் எந்தவொரு அதிகாரியின் வீடியோ வைரலாவது பற்றி அறியப்பட்டால் துறை ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.