கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) இந்து-முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார்.
இதை கண்டித்து அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது.
கல்வியின் நோக்கங்களுள் ஒன்று பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒருகூரையின் கீழ் ஒன்றுபடுத்துவது;
ஒன்றுபட்ட சமூகத்தை இரண்டுபடுத்துவது அல்ல,
ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம். இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.