Home இந்தியா கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

by Jey

உ.பி., மக்களிடம் பொய் வாக்குறுதிகளை குடும்ப கட்சி அளித்து வருவதாக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

உ.பி., மாநிலம் ஷகாரான்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறோம். சந்தைகளில் விலை ஏற்ற இறக்கத்தினால், விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.

ஒரு குடும்ப கட்சி, உபி.,மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்து வருகிறது. ஒருவர் பெரிய அளவில் வாக்குறுதி அளித்தால், அதில் ஒன்றும் இருக்காது. பொறுப்பற்ற முறையில் அளிப்பார்கள். மின்சாரம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், மாநிலத்தை இருளில் வைத்து விட்டு, தாங்கள் வசிக்கும் மாவட்டங்களை மிளிர செய்துவிட்டு, ஷகாரான்பூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தின் பலன்களை சிறு விவசாயிகளுக்கு கிடைக்க செய்ததில் உ.பி.,யில் பா.ஜ., அரசு முக்கியமாக இருந்தது. முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க முத்தலாக் ரத்து செய்யப்பட்டது.

எங்களின் தெளிவான எண்ணத்தை முஸ்லிம் சகோதரிகள் மற்றும் குழந்தைகள் புரிந்து கொண்டனர். அவர்களை முத்தலாக்கில் இருந் விடுவித்து பாதுகாப்பு அளித்தோம். முஸ்லிம் பெண்களின் ஆதரவு பா.ஜ.,விற்கு கிடைத்ததை தொடர்ந்து, பயந்த எதிர்க்கட்சியினர் அவர்களை தூண்டி விடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம் பெண்களுக்கும் ஆதரவாக மத்திய அரசு உள்ளது. அந்த பெண்களின் வாழ்க்கை பின்னடைவை சந்திக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் தூண்டி விடுகின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

related posts