தடுப்பூசி சான்றிதழ் தற்போதைக்கு ரத்து செய்யப்படாது என ஒன்றாரியோ மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அல்பர்ட்டா மாகாணத்தில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தில் சில சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருவதாகவும், அதன் துணைத்திரிபொன்றும் ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.