பருவ மழை தப்பி விவசாயம் கேள்விக்குறி ஆனதால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பயிர்கள் வாடி பாழ்பட்டுள்ள விவசாய நிலங்களை பேரிடர் மேலாண்மை ஆணைய துணை கமிஷனர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில், செப்., 2021 முதல், மார்ச் 2022 வரையிலான ஆறு மாதங்களை, மாநிலம் முழுதும் மிதமான வறட்சி பாதித்த காலமாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்து உள்ளது.