கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துமாறு கன்சர்வேட்டிவ் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் இடைக்கால தலைவி Candice Bergen இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் நாட்டை நேசிப்பதனால் இவ்வாறு போராட்டம் நடத்தி வருவதாகவும், சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவே போராடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சகலவிதமான கோவிட் கட்டுப்பாடுகளையும் இந்த மாத இறுதியில் தளர்த்துமாறு கோரி கன்சர்வேட்டிவ் கட்சி பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.