ஒன்றாரியோ மாகாணத்தில் ட்ரக் பேரணி போராட்டத்தை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து அண்மைய நாட்களாக கனடாவில் இந்த ட்ரக் பேரணி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகால நிலையை பிரகடனம் செய்வது குறித்தும் மாகாண அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டால் போராட்டக்காரர்கள் மீது அபராதங்களை விதிக்கவும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், போராட்டக்காரர்கள் வீடு திரும்ப வேண்டுமெனவும் மாகாண முதல்வர் டக் போர்ட் கோரியுள்ளார்.