விக்ரமிற்கு சிறந்த திருப்புனையாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள படம் மகான். முதல்முறையாக தந்தையும் மகனும் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கேரியரில் இந்த படம் சிறந்த படமாக அமைந்துள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ இயங்குதளத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த், தீபக் ரமேஷ், நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனைவரது நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளது. எந்தவித கதாபாத்திரையும் துணிச்சலுடன் ஏற்று நடிக்கும் நடிகர் விக்ரம் இந்த படத்திலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார், அதேபோல துருவ் விக்ரமும் தனது தந்தைக்கு ஈடாக நடித்து கலக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜுக்கே உரிய ஸ்டைலில் இப்படம் அமைந்து இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்து இருக்கிறது.
இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகையில், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் ரஜினிகாந்த இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டை தெரிவித்துள்ளார். “மிக அருமையான படம், அனைவரது கதாபாத்திரமும் சிறப்பாக உள்ளது ” என்று மனம் மகிழ்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஆம், தலைவர் மகான் படத்தை மிகவும் விரும்புகிறார், என்னை அழைத்ததற்கு நன்றி தலைவா, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்று நன்றியுரைத்துள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த பல படங்களை பாராட்டிய நிலையில் தற்போது மகான் படத்தையும் பாராட்டி இருக்கிறார்.