இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. ஹிந்தியில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ளது.
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா இயக்கியிருந்தார். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பட்டவர்த்தமான தோலுரித்துக் காட்டிய இப்படத்துக்கு, தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ரிலீஸூக்கு தயாராகி வரும் இப்படத்தின் டீசர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. டீசரின் தொடக்கமே பொள்ளாச்சியில் தலித் சிறுமிகளின் தற்கொலை காட்சியில் இருந்து தொடங்குகிறது.
சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் கொடுமையை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், பொள்ளாச்சியில் அரங்கேறிய பாலியல் கொடுமைகளை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறதோ? என எண்ணத் தோன்றுகிறது.
’நடுநிலை என்பது நடுவுல இருக்கிறது இல்ல சார், நியாயத்தின் பக்கம் நிற்பது’ என போலீஸாக வரும் உதயநிதி பேசும் வசனங்கள் ரசிகர்களின் புருவத்தை உயரவைத்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஆரி, தன்யா ரவிசந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை படத்தை தயாரித்திருக்கும் போனி கபூரின் பேவியூ ஸ்டுடியோஸ், ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.