விண்வெளியில் உண்டான காந்த புயலினால் செயற்கோள்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க்கின் ஏராளமான செயற்கை கோள்கள் சேதமடைந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஞ்ஞான சாதனையாக திகழும் வான்வெளியில் நிறுத்தபட்ட செயற்கை கோள்களை கண்ணுக்கு தெரியா காந்த புயல் நொடியில் செயலிழக்க வைத்துள்ளது.எலோன் மஸ்க்கின் விண்வெளி முயற்சியில், ஸ்பேஸ்எக்ஸ் பல செயற்கைக்கோள்களை இந்த புயலில் இழந்தது, சமீபத்தில் ஏவப்பட்ட பல செயற்கை கோள்கள் பூமியை நோக்கி விழுந்ததால் அழித்தது.
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்டார்லிங்க் ஏவிய 49 செயற்கைக்கோள்களில் 40 செயற்கை கோள்கள், புவி காந்த புயலால் தாக்கப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து விட்டன, அல்லது நுழைவதற்கான பாதையில் உள்ளன என்றும், அவ்வாறு நிகழும் போது செயற்க்கை கோள்கள் எரிகின்றன எனவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது சுற்றுப்பாதையில் குப்பைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை எனப்தோடு, எந்த பாகமும் தரையில் விழவில்லை என்றும் ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த காந்தப்புயலால், வளிமண்டலத்தின் வெப்பநிலை மற்றும் அடர்த்தியை அதிகரித்தாக கூறிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள்களின் இழுவை முந்தைய ஏவுதலை விட 50% அதிகமாக இருந்தது என்றும், புயலின் காரணமாக ஏற்படும் தாக்கத்தை தவிர்க்க, செயற்கைக்கோள்களை காகிதத் தாள் போல பறக்க விடுவதன் மூலம் அவற்றைக் காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தன என்று SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.
புவி காந்த புயல் என்பது பூமியின் காந்த மண்டலத்தின் பெரும் இடையூறு என்று கூறியுள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), அவை நீடித்த மற்றும் சக்திவாய்ந்த சூரியக் காற்றால் தூண்டப்படுகின்றன என்றும், காந்த மண்டலத்தில் உள்ள நீரோட்டங்கள், பிளாஸ்மாக்கள் மற்றும் புலங்களில் மாற்றங்களை உருவாக்குகின்றன என்றும் தெரிவித்துள்ளது.