கல்லூரிக்கு வரும் மாணவிகள் பலர் ஹிஜாப் (Hijab) அணிந்து வரத் தொடங்கினர். அதற்கு எதிர்வினையாக முஸ்லிம் அல்லாத மாணவ-மாணவிகள் காவி நிறை துண்டுகளை உடுத்தி கல்லூரிக்கு வர ஆரம்பித்த நிலையில் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை வழங்கியது. மேலும், மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மறு தீர்ப்பு வரும் வரை சீருடை மட்டுமே அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வர வேண்டும், எனவும், ஹிஜாப், காவித் துண்டு போன்றவற்றை அளிய என கர்நாடக உயர்ந்தீமன்ரத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை – தீவிரமடையும் போராட்டங்கள்!
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள்மனு தக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர். எனினும் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்த விவகாரம் முடிவுக்கும் வரும் வரை, மக்களைத் தூண்டும் வகையில் கல்வி நிறுவனங்களில் மத உடை அணிய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கை பின்னர், உரிய நேரத்தில் எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதையும், உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையையும் கவனித்து வருவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதை தேசிய அளவிலான பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்றும், உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிடும் என்றும் கூறியது.
முன்னதாக, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ஹிஜாப் விவகாரத்தை விசாரிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்காததன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமையை உயர் நீதிமன்றம் மறுக்கிறது என்று மேல்முறையீடு கூறுகிறது. இந்த வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளது.