கென்யா முன்னாள் பிரதமர் ஓடிங்கா, தனிப்பட்ட முறையில் நேற்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது, சுமார் மூன்றரை ஆண்டுகால இடைவெளிக்கு பின் ஓடிங்காவை சந்திப்பது குறித்த மகிழ்ச்சியை மோடி வெளியிட்டார்.
அவருடன் 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவிலும், கென்யாவிலும் தான் நடத்திய கலந்துரையாடல்களை மோடி நினைவுகூர்ந்தார். 2009, 2012-ம் ஆண்டுகளில் ‘துடிப்பான குஜராத்’ மாநாட்டுக்கு ஓடிங்கா அளித்த ஆதரவு குறித்தும் மோடி கூறினார்.
இரு தரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்கள் விவாதித்தனர். இந்திய-கென்ய உறவை மேலும் வலுப்படுத்துவதில் தான் கொண்டிருக்கும் உறுதியை மோடி வெளிப்படுத்தினார். மேலும், ஓடிங்காவின் நல்ல உடல்நலத்துக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.