உக்ரேய்ன் தலைநகர் கியூவில் இந்த தூதரகம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
தூதரகத்தில் பணியாற்றி வந்த ராஜதந்திர பணியாளர்கள் உக்ரேய்னின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வேறும் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, உக்ரேய்ன் ஜனாதிபதி வொலாடைமர் ஸெலன்ஷ்கீயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதன் பின்னர், தூதரகம் மூடப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.
தற்காலிக அடிப்படையில் தூதரகம் மூடப்படுவதாகவும் தற்காலிக அடிப்படையில் தூதரகப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.