ட்ரக் வண்டி போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடைப்பட்டிருந்த
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அம்பாசெடர் பாலம் மீளத் திறக்கப்பட்டுள்ளது.
ஒரு வார கால போராட்டத்தின் பின்னர் இந்தப் பாலம் போக்குவரத்திற்காக மீளத் திறக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகளை எதிர்த்து கனடாவில் பாரியளவில் ட்ரக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொலிஸாரின் தலையீட்டுடன் குறித்த போராட்டம் கலைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் வின்ட்சோரையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை முடக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 25 முதல் 20 வரையிலான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.