கனடாவில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ட்ரக் வண்டி பேரணியை தடுக்கும் நோக்கில் கனடாவில் இவ்வாறு அவசரகால நிலையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமுல்படுத்தியுள்ளார்.
கனடாவில் முதல் தடவையாக இவ்வாறு அவசரகால நிலை நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டாவா மற்றும் எல்லைப் பகுதிகள் என்பனவற்றில் ட்ரக் வண்டி போராட்டம் காரணமாக பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
பொறுப்புவாய்ந்த தலைமைத்துவம் என்ற வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.