Home இந்தியா அ.தி.மு.க. ஹிந்தி மொழியில் ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம்

அ.தி.மு.க. ஹிந்தி மொழியில் ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம்

by Jey

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, முதல் வார்டில், மொத்தம், 1,526 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 30 சதவீத வாக்காளர்கள், வட இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் அதிக அளவில் அந்த வார்டில் வசித்து வருகின்றனர்.

அந்த வார்டில், தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., – நாம் தமிழர் உட்பட ஏழு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முப்பது சதவீத ஓட்டு வங்கி கொண்ட வட இந்தியர்கள், ஒட்டு மொத்தமாக ஓட்டு போட்டால் வெற்றி நிச்சயம். அதனால், வட இந்தியர்களின் சங்க நிர்வாகிகளை, வேட்பாளர்கள் அணுகி, வாக்குறுதிகள் அள்ளி வீசி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

அந்த வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் மதிவாணன் என்பவர், எளிதில் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக,ஹிந்தி மொழியில் ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம் அச்சிட்டு, அதை அங்கு வசிக்கும் வட இந்திய வாக்காளர்களுக்கு வினியோகம் செய்து வருகிறார். புன்னகையுடன் அந்த துண்டு பிரசுரத்தை, அவர்கள் பெற்று கொள்கின்றனர்.

related posts