Home இலங்கை இலங்கையின் உறுதியான பங்காளி மற்றும் உண்மையான நண்பனாக இந்தியா

இலங்கையின் உறுதியான பங்காளி மற்றும் உண்மையான நண்பனாக இந்தியா

by Jey

இலங்கையில் கடுமையான அன்னியச்செலாவணி தட்டுப்பாடு உள்ளது. இதன்காரணமாக இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அந்த நாட்டுக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை நேற்று வினியோகம் செய்தது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ” இலங்கையின் உறுதியான பங்காளி மற்றும் உண்மையான நண்பனாக இந்தியா உள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே இந்திய எண்ணெய் கழகத்திடம் இருந்து 40 ஆயிரம் டன் எரிபொருளை இலங்கையிடம் ஒப்படைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை நிதி மந்திரி பாசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், இந்த உதவி செய்யப்பட்டுள்ளது.

related posts