ஒட்டாவா நகர காவல்துறை பொறுப்பதிகாரி பீட்டர் சொலொலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒட்டாவா நகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் ட்ரக் வண்டி போராட்டங்களினால் சொலொலி இவ்வாறு பதவி விலகுகின்றார்.
கனத்த இதயத்துடன் தாம் பதவி துறப்பதாக சொலொலி தெரிவித்துள்ளார்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நகரத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தாம் முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விரைவில் காவல்துறை பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் பிரதி பொறுப்புதிகாரியாக கடமையாற்றிய ஸ்டீவ் பெல், பதில் பொறுப்புதிகாரியாக கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.