கனடாவிற்குள் பிரவேசிக்கும் விமானப் பயணிகளுக்கான பீ.சீ.ஆர் பரிசோதனை நடைமுறையில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பூரணமாக கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட விமானப் பயணிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்குள் பிரவேசிக்கும் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முன்னதாக பீ.சீ.ஆர் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற நிபந்தனை காணப்பட்டது.
எனினும் நடைமுறையை தளர்த்துவதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, இனி வரும் காலங்களில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் பயணிகள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு பதிலாக என்டிஜன் பரிசோதனை செய்து கொள்வது போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.