கனடாவில் சிறுவர்களை போராட்டத்திற்கு அழைத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஏற்கனவே நாட்டில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் கோவிட் சட்டங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு ட்ரக் வண்டி பேரணி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் சிறுவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினால் 5000 டொலர் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் கனடாவில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவினால் இந்த அவசரகால சட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.