ஜெட் எரிபொருள் அல்லது ஏ.டி.எப்.,’ என அழைக்கப்படும், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, விமான கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக, நான்கு முறை விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ லிட்டருக்கு, கிட்டத்தட்ட 5.2 சதவீதம், அதாவது 4,482 ரூபாய் அதிகரித்து, 90 ஆயிரத்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்த அளவுக்கு விலை அதிகரித்தது இல்லை. இந்திய வரலாற்றில் இது தான் மிக அதிகம்.கடந்த நான்கு முறையில், 1 கிலோ லிட்டருக்கு மொத்தம் 16 ஆயிரத்து, 497 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சராசரி விலையின் அடிப்படையில், விமான எரிபொருள் விலை, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு, விமான சேவை நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.