ஆஸ்திரேலியாவில், மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலங்களுள், கடற்கரையும் ஒன்று. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கடலில் குளித்து மகிழ்வர்.சமீபத்தில், சிட்னிக்கு அருகில் உள்ள லிட்டில் பே என்ற கடற்கரையில், கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார்.
கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவர், சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.கடந்த, 1963க்குப் பின், சிட்னி கடற்கரையில், இப்போது தான் சுறா மீன் தாக்குதல் நடந்துள்ளது.
இதையடுத்து, சிட்னில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், சுறா மீனை பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.