Home உலகம் எலிசபெத் ராணியின், 70வது ஆண்டு முடிசூட்டு விழாவில் சங்கடம்

எலிசபெத் ராணியின், 70வது ஆண்டு முடிசூட்டு விழாவில் சங்கடம்

by Jey

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவருக்கு, 120 கோடி ரூபாய் இழப்பீடு தந்து வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இது, எலிசபெத் ராணியின், 70வது ஆண்டு முடிசூட்டு விழாவை கொண்டாடி வரும் அரச குடும்பத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், ஆண்ட்ரூ தன் மீதான பாலியல் வழக்கை முடிக்க, வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன் நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் – பிலிப் தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ.கடந்த, 2001ல் ஆண்ட்ரூ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த குற்றச்சாட்டை ஆண்ட்ரூ மறுத்து, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய கோரினார். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

வழக்கை திரும்பப் பெற, வர்ஜீனியா கியூப்ரேவுக்கு, 120 கோடி ரூபாய் தர ஆண்ட்ரூ சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விரைவில் வழக்கை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

related posts