‘கடந்த ஆண்டில், கிரிமினல்கள் வசம் இருந்த சட்டவிரோத ‘கிரிப்டோகரன்சி’யின் மதிப்பு, கிட்டத்தட்ட 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.’பிளாக்செயின்’ தரவு நிறுவனமான ‘செயினாலிசிஸ்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது:
குற்றவாளிகள் பலரை கோடீஸ்வரராக்கி உள்ளது, கடந்த ஆண்டு. இதற்கு கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணயங்கள் உதவியாக இருந்துள்ளன.
கடந்த 2020 இறுதியில், குற்றச் செயல் புரிபவர்கள் வசம் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி நிதி இருந்தது.இது 2021ம் ஆண்டில், 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியாக உயர்ந்துஉள்ளது.
இது ஆதாரங்கள் இருக்கக்கூடிய, அறியப்பட்ட சட்டவிரோத நிதியின் அளவாகும்.கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, கிரிமினல்களால் களவாடப்பட்ட நிதியின் மதிப்பு மட்டும், 73 ஆயிரத்து, 500 கோடி ரூபாய். இது, கிரிமினல் வசம் இருக்கும்
மொத்த தொகையில் 93 சதவீதமாகும்.இதற்கு அடுத்தபடியாக சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்வதன் வாயிலாக, 3,350 கோடி ரூபாயை கடந்த ஆண்டில் திரட்டி உள்ளனர்.இதேபோல், மோசடி கடைகள் வாயிலாக, கிட்டத்தட்ட 1,450 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர்.
இந்த குற்றவாளிகள் பலரை கோடீஸ்வரராக்கி உள்ள கிரிப்டோகரன்சித குற்றவாளிகளின் இருப்பு தொகை, கடந்த ஆண்டு முழுதும் மிகுந்த ஏற்ற – இறக்கத்துடன் இருந்துள்ளது. குறைந்தபட்சமாக ஜூலை மாதத்தில் 49 ஆயிரத்து 500 கோடி ரூபாயும்; அக்டோபரில் 1.11 லட்சம் கோடி ரூபாயாகவும்
இருந்துள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.