Home இந்தியா மத்திய அரசு தேர்வு செய்யும் எய்ம்ஸ் இயக்குனர் போட்டி

மத்திய அரசு தேர்வு செய்யும் எய்ம்ஸ் இயக்குனர் போட்டி

by Jey

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் உட்பட 32 பேர் ‘எய்ம்ஸ்’ எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் மைய இயக்குனருக்கான போட்டியில் உள்ளனர்.

டில்லியில் உள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா மார்ச் 23ல் பணி ஓய்வு பெறுகிறார். இந்தப் பதவிக்கு ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பர்கவா எய்ம்ஸ் டாக்டர்கள் 12 பேர் உட்பட 32 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், பயோ டெக்னாலஜி துறை செயலர் ராஜேஷ் கோகலே, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங் ஆகியோர் அடங்கிய தேடுதல்
குழு விண்ணப்பித்த 32 பேரில் இருந்து தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.

அதில் இருந்து ஒருவரை எய்ம்ஸ் இயக்குனராக மத்திய அரசு தேர்வு செய்யும். தேடுதல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related posts