உக்ரைனில் போர் பதற்றம் அதிகமாக காணப்படும் முக்கிய பகுதியான லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியில் நேற்றிரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் லுஹான்ஸ்க் பகுதியில் இன்னொரு வெடிவிபத்தும் ஏற்பட்டது என அங்குள்ள செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எரிவாயு குழாய் வெடிவிபத்தினை தொடர்ந்து 40 நிமிடங்கள் கழித்து அடுத்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களில் காயமடைந்தோர் நிலவரம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பன போன்ற தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை.
ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது அடுத்த வாரம் அல்லது அடுத்த சில தினங்களில் தாக்குதலை தொடங்கலாம். அப்படியிருக்கையில், ரஷியா உக்ரைனின் தலைநகரான கையிவ் நகரத்தை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருந்த நிலையில் நேற்று இந்த விபத்துக்கள் ஏற்பட்டிருப்பது, உக்ரைனில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.