ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் இலங்கை மயலிட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர்களின் படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 6 மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் வரும் மார்ச் மாதம் 4 ஆம்திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.