Home இந்தியா ஸ்டாலின் ஒரு நாள் ஓய்வு எடுத்தார் என யாராவது நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய்

ஸ்டாலின் ஒரு நாள் ஓய்வு எடுத்தார் என யாராவது நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய்

by Jey

ஒரு மனிதன் போட்டிக்கு செல்கிறான் என்றால், எதிராளியுடன் மோதும் அளவுக்கு உடம்பில் பலம் இருக்க வேண்டும். அதேபோல, பந்தயத்தில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றால், அதற்குரிய தொகையை இடுப்பில் முடிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் கையால் முழம் போடக்கூடாது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், இப்படித்தான் வெறும் கையால் முழம் போட்டுள்ளார்.

அதாவது, ‘அமெரிக்க ஜனாதிபதி, இங்கிலாந்து பிரதமர், ரஷ்ய அதிபர் போன்றவர்கள் எல்லாம், இரண்டு நாட்கள், நான்கு நாட்கள் என ஓய்வு எடுப்பர். ஆனால், எட்டு மாதங்களில் ஒரு நாள் கூட, முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கவில்லை. ‘அப்படி அவர் ஒரு நாள் ஓய்வு எடுத்தார் என யாராவது நிரூபித்தால், அந்த நபருக்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன். என்னிடம் பணம் இல்லை; கடன் வாங்கியாவது தந்து விடுவேன்’ என்று வாய் சவடால் விட்டு இருக்கிறார். கையில் துட்டு இல்லாத நபர், எதற்கு சவால் விட வேண்டும்?

10 லட்சம் ரூபாய்க்கு ஏன், ‘பெட்’ கட்ட வேண்டும்?இளங்கோவனின் பந்தயத்தில், முதல்வரின் மனைவி துர்கா தவிர, வேறு ஒருவராலும் வெற்றி பெற முடியாது. ஒரு வேளை ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் வாயிலாக, ஒருவர் இந்த தகவல் அறிந்து, அதை இளங்கோவனுக்கு தெரிவித்தாலும், ௧௦ லட்சம் ரூபாய் பரிசுத் தொகை உடனடியாக கைக்கு கிடைக்கப் போவதில்லை.’என்னிடம் பணம் இல்லை’ என்று இளங்கோவன் உஷாராக முன்கூட்டியே சொல்லி விட்டார்.

அவர் எப்போது கடன் வாங்கிக் கொடுப்பது? அப்படியே யாராவது கடன் கொடுக்க முன் வந்தாலும், -உத்தரவாத கையெழுத்து யார் போடுவர்?தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போடுவாரா? இல்லை… முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போடுவாரா?அட விடுங்க; மறைந்த நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல், அந்த ௧௦ லட்சம் ரூபாய் கடனுக்கு இளங்கோவனுக்காக ஜாமின் கையெழுத்து போடுவாரா?வாய் இருக்கிறது என்பதற்காக, ஏதாவது உளறிக் கொட்டி கிளறி மூட வேண்டும் என்று அவசியமில்லை. ‘தவளை தன் வாயால் கெடும்’ என்ற பழமொழியை மெய்ப்பித்து விடாதீர்கள் இளங்கோவன்!

related posts