Home Uncategorized தமிழ் ஒரு கட்டாய பாடமாக கூட இல்லை – பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

தமிழ் ஒரு கட்டாய பாடமாக கூட இல்லை – பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

by Jey

தாய்மொழியை காக்க விரும்புவோர் செய்ய வேண்டிய முதல் பணி, தாய்மொழி வழிக் கல்வியை காப்பதுதான். மொழிப்போர் நடத்திய தமிழகத்தில், தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை இல்லை என்பது தலைகுனிவு. தமிழகத்தில், தமிழ் ஒரு கட்டாய பாடமாக கூட இல்லை என்கிற நிலை இன்னும் நீடிப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நிலையை மாற்றி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற நிலையை உருவாக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில், தமிழ் ஒரு கட்டாய பாடமாக கூட இல்லை என்கிற நிலை நீடிப்பது, மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தாய்மொழியின் பெருமையையும், அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த, உலக தாய்மொழி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வங்க மொழி பேசும் மக்கள் மீது, உருது திணிக்கப்பட்டதற்கு எதிராக போராடிய, ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளை குறிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை, தாய்மொழி நாளை அறிவித்துள்ளது.

 

related posts