மதுரை மாநகராட்சி முதல் மண்டலத்திற்கான ஓட்டு எண்ணிக்கையின் போது பத்திரிகையாளர்களை நோட்டு, பேனா, அலைபேசி எதுவுமின்றி வரவேண்டும் என பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.
எதுவும் இல்லாமல் வெறும் பாஸ் வைத்துக் கொண்டு நாங்கள் மட்டும் எதற்கு உள்ளே செல்ல வேண்டும் என பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பின் மீடியா சென்டரில் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் உள்ளே விட்டனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் முறையிட்ட போது, ” இப்போ அலைபேசியுடன் தானே இருக்கிறீர்கள்.
ஓட்டு எண்ணிக்கை மைக்கில் அறிவிப்பார்கள். வாங்கி கொள்ளுங்கள்” என்றபடி சென்றார்.இதனை கண்டித்து நிருபர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.