இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆன்லைன் மீட்டிங்குகளை ரத்து செய்துள்ளதாகவும் லேசான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. 95-வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகள் தென்படுவதாகவும் வின்ட்சர் அரண்மனையில் தங்கியிருந்து இலகுவான பணிகளை தொடர்ந்து செய்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு 3 தினங்கள் ஆகியுள்ள நிலையில், ராணி எலிசபெத்திற்கும் இன்னும் லேசான அறிகுறிகள் தென்படுவதாக இன்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.